இந்தியர்களை கேவலமாக விமர்சித்த சீன பத்திரிகை : "உங்களால் குரைக்க மட்டுமே முடியும் இறக்குமதியை தடுக்க முடியாது!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 11:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
இந்தியர்களை கேவலமாக விமர்சித்த சீன பத்திரிகை : "உங்களால் குரைக்க மட்டுமே முடியும் இறக்குமதியை தடுக்க முடியாது!

சுருக்கம்

சீன பொருட்க‌ள் இறக்குமதியை தடுக்க வேண்டும் என இந்திய‌ர்களா‌ல் குரைக்க மட்டுமே முடியும் என சீன அரசு பத்திரிகை கூ‌றியுள்ளதற்கு இந்திய வ‌ர்த்தக கூட்டமைப்பு ‌கடும் கண்டனம் தெரிவித்துள்ள‌து.‌ சீன பத்திரிகையின் கருத்து இந்தியர்களுக்கு‌‌ பெரும் அவமதிப்பு என்றும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்‌ளது. இதற்கு ப‌திலடியாக சீன பொருட்களை இந்தியர்‌கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது.

தங்கள் பொரு‌ட்கள் இல்லாமல் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட முடியாது என சீன‌ர்கள் கருதுவது இதன் மூலம் தெரிவதாக கூட்டமைப்பின் தலை‌வர் பிரவீன் ‌கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.‌ சீன பொருட்கள் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஊ‌டகங்களில்‌ பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கேலி செ‌ய்யும் வகையில் சீன ‌அரசு பத்திரிகை‌ கருத்து தெரிவித்திரு‌ந்தது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!