தீவிரமாகிறது வர்த்தகப் போர்: டிரம்ப் விதித்த வரிக்கு சீனா பதிலடி

By thenmozhi gFirst Published Sep 19, 2018, 1:35 PM IST
Highlights

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.14.5 லட்சம் கோடி(20,000கோடி டாலர்)மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.14.5 லட்சம் கோடி(20,000கோடி டாலர்)மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதேபோல, அமெரி்க்காவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.4.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று சீனாவும் அறிவித்து டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது, இதன் தாக்கம் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை மேலும் சரிவடையச் செய்யும்.

இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனா தனது வர்த்தகக் கொள்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாங்களஅ உறுதியாக இருக்கிறோம். தனது மோசமான நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதற்கு பதிலாக அமெரிக்க விவசாயிகள், தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு பாதிப்பைஏற்படுத்தும் வகையில் சீனா நடந்து கொள்கிறது.

இதன் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப்படுகிறது. 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரி 25சதவீதமாக உயர்த்தப்படுகிறதுவரும் ஜனவரி1-ம் தேதி முதல் அந்த கூடுதல் வரி அமலுக்கு வரும் எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, 3,400 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரிவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6,000 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல்வரி விதிப்பதாக சீனாவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீனா வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரி்க்கா முயன்றால், எதிர்மறையான விளைவுகளைத்தான் சந்திக்க நேரிடும். உலகளாவிய வர்த்தக நடவடிக்கையில் சீனாவுக்கு இருக்கும் உரிமைகளை நிலைநாட்ட சில பதில் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது உள்ளது.அதை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து இருப்பதால், வளரும் பொருளாாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் மிகுந்த அச்சமடைந்துள்ளன

click me!