இவ்வளவு பட்டும் அடங்காத சீனர்கள்...!! சொல்லி புரிய வைக்க களத்தில் இறங்கிய ஜி- ஜின்-பிங் அரசு..!!

By Ezhilarasan Babu  |  First Published May 21, 2020, 11:13 AM IST

தெற்கு சீனாவில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் வவ்வால் ,  எறும்புத்தின்னி , எலி , சிவெட் பூனை ,   பங்கோலின்  போன்ற  விலங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .  


கொரோனா வைரஸ் உருவான வூபே மாகாணம் வுஹானில் காட்டு விலங்குகளை சாப்பிடுவது மற்றும் அந்த விலங்குகளை இனப்பெருக்கம் செய்வது சட்டவிரோதம் என  அறிவித்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக   காட்டு விலங்கு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை கைவிட வேண்டுமென சீன அதிகாரிகள் அம்மாகாண மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்  . சீனாவின் மத்திய மாகாணத்தில் சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில் கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் தொற்று பரவியது இதையடுத்து வுஹான் வன  விலங்குகள் இறைச்சி சந்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது .  இங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய வைரஸால் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் சீனாவில் அதிகரித்துவரும் சட்டவிரோத விலங்குகள் வர்த்தகத்தை தடுக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் . 

Latest Videos

சீனாவின்  வூபே மாகாணம் வுஹான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு விலங்குகளை  உண்ணவும் , அவைகளை விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தெற்கு சீனாவில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் வவ்வால் ,  எறும்புத்தின்னி , எலி , சிவெட் பூனை ,   பங்கோலின் , போன்ற  விலங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .  குறிப்பாக வௌவால்கள்  மற்றும் எறும்புத்தின்னி மூலமாக  வைரஸ் பரவியிருக்கக்கூடும் மென சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற ஆபத்தான அருவருப்பான விலங்குகளுக்கு முன்கூட்டியே சீனா தடை விதித்திருந்த நிலையில் அங்குள்ள  உள்ளூர் கிராம மக்கள் சில காட்டு விலங்குகளை பாரம்பரிய நாட்டு மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர் . எனவே இனி இதுவும் கூடாது என வனவிலங்கு விற்பனைக்கு   முற்றிலும் தடை விதித்துள்ள சீன அரசு உள்ளூர் நிர்வாகம் மூலம் இதுபோன்ற அபாயமான அருவெருப்பான  விலங்குகள் மூலம் ஏற்படும் அபாயங்கள்  குறித்து உள்ளூர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைஏற்படுத்தி வருகின்றனர். 

அதேபோல் வுஹான் மற்றும் அதன் அண்டை மாகாணங்களில் ஒன்றான  ஜியாங்சி மாகாணம் விவசாயிகளுக்கு தென் கிழக்கு சீனப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமப்புற விவசாயிகள்  இறைச்சிக்காக இது போன்ற வனவிலங்குகளை உற்பத்தி செய்வதை பண்ணைத் தொழிலாகவே மேற்கொண்டுவருகின்றனர் இதன் மூலம் ஆண்டிற்கு 1.6 பில்லியன் யுவான் அதாவது 225 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு  வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது .  இங்கு விலங்குகள்  இனப்பெருக்கத்தின் மூலம் மட்டும் கடந்த 2018  ஆம் ஆண்டில் 10 பில்லியன் யுவான் ஈட்டியுள்ளதாக  உள்ளூர் வர்த்தக அமைப்புகள் தெரிவிக்கின்றன . சமீபத்தில்  ஜியாங்சி மாகாணம் இது போன்ற காட்டு விலங்கு வர்த்தகத்தை விரிவுபடுத்தி இருந்த நிலையில் ,  தற்போது விவசாயிகளை விலங்கு உற்பத்தியை  கைவிட்டு விவசாய காய்கறி பண்ணை மற்றும் மூலிகை வளர்ப்பு விவசாயத்தில்  ஈடுபடுமாறு சீனா அரசு அழைப்பு விடுத்துள்ளது . கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீன அரசை வனவிலங்கு இனப்பெருக்கம் மற்றும் அதன் இறைச்சி வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் போராடி வந்த நிலையில் தற்போது வனவிலங்கு உற்பத்தியை தடுக்க அரசு முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது . 

 

click me!