இந்தத் தவறான எண்ணங்களை தொடர்ந்து சீனாவின் கொள்கைகளுக்கு அது அழுத்தம் கொடுத்து வருகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதற்கு காரணம் இந்திய படைகளின் ஆணவமும், தைரியமும்தான் என சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. இராணுவ மோதல்கள் இருநாடுகளுக்கும் நல்லது அல்ல எனவும், அதே நேரத்தில் ஒரு நீண்ட யுத்தத்திற்கு சீனா முழுமையாக, தயாராகவே இருக்கிறது எனவும் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு தெரிவித்துள்ளது. இருநாட்டு எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சீன நாளேட்டின் இந்த செய்தி இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும், அப்போது முன்கூட்டியே தாக்க தயாரிப்புடன் இருந்த சீனர்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடந்தி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்திய-சீன எல்லை பதற்றம் குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இந்த அளவிற்கு பதற்றம் நிலவுவதற்கு காரணம், இந்திய படைகளின் ஆணவமும், தைரியமும்தான்.
ஒரு சில தவறான கருத்துக்களால் இந்தியா எல்லை பிரச்சினைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது, அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் வைத்துக் கொண்டுள்ள இந்தியாவுடனான உறவை சீனா விரும்பவில்லை, அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும் பதில் அளிக்கவும் விரும்பவில்லை. இரண்டாவதாக இந்தியாவின் ராணுவ வலிமை சீனாவை விட அதிகம் என இந்தியாவிடம் ஒரு தவறான கருத்து உள்ளது, இந்தத் தவறான எண்ணங்களை தொடர்ந்து சீனாவின் கொள்கைகளுக்கு அது அழுத்தம் கொடுத்து வருகிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள சக்தி எவ்வளவு என்பது தெளிவாக உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரர்களும் இறந்தனர், இந்த முறை இந்திய ராணுவத்திற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, படையினர் இருபுறமும் இறந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் உரையாடல் மூலம் பதற்றத்தை குறைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல் சீனா கல்வான் பள்ளத்தாக்கில் மனஅழுத்தத்தை குறைக்க விரும்புவதுடன், பள்ளத்தாக்கில் பதற்றம் குறைவதை காண விரும்புகிறது என்று எழுதியுள்ளது. மேலும் லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது துருப்புகளை இந்தியா சிறப்பாக நிர்வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இரு படைகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தப்படும் நிலைமைகள் அமைதியாக இருந்தால் அது இருநாட்டுக்கும் நன்மை பயக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.