சரிந்து விழுந்த மலை - 100க்கும் மேற்பட்டோர் மாயம்...

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
சரிந்து விழுந்த மலை - 100க்கும் மேற்பட்டோர் மாயம்...

சுருக்கம்

china land slide killed 100

சீனாவின் தென் மேற்கில்  திபெத்திய - அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இன்று காலை திடீரென சரிநிது  விழுந்ததில் 100 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகள் இன்று காலை திடீரென சரிந்து விழத் தொடங்கியது. மலைச் சரிவில் உள்ள ஜின்மோ என்ற கிராமத்தில் இருக்கும் 40 வீடுகள் இந்த மண்சரிவில் புதைந்தன. 

இதில் ஜின்மோ கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக சீனாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

நூற்றுக்கும் மேற்பட்டோர்  மண்ணில் புதைந்துள்ளதால் அவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் அண்மைக்காலமாக  நிலச்சரிவு சம்பவங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் மத்திய ஹுபை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!