மெக்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தீட்டிய சதிதிட்டம் முறியடிப்பு…. 5 பேர் கைது….

First Published Jun 24, 2017, 9:01 AM IST
Highlights
bomb blast in mecca


இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் பெரிய மசூதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில், பெரிய மசூதி இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்குகிறது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மெக்காவில் பயங்காவாத தாக்குதல் நடத்த தீட்டப்பட்டிருந்த சதித்திட்டம் , உயிரிழப்பு ஏற்படாமல் முறியடிக்கப்பட்டதாக சவுதி போலீஸ் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தடையை மீறி மசூதிக்குள் சென்றபோது குண்டுகளை அவன் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக் கொன்றனர். அப்போது குண்டு வெடித்ததில் ஒரு கட்டடம் சரிந்து விழுந்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 6 பேரும் மற்றும் 5 பாதுகாவலர்கள் காயமடைந்தனர். 

இந்த தாக்குதல்  தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த ஆண்டு மெக்கா, மெதினாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

click me!