உலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா... தென் சீனக் கடலில் வெடிக்கப்போகும் போர்... திமிறும் டிரம்ப்..!

By Thiraviaraj RMFirst Published May 29, 2020, 1:35 PM IST
Highlights

சீனா உலகிற்கு கொடுத்த மோசமான பரிசுதான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

சீனா உலகிற்கு கொடுத்த மோசமான பரிசுதான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

உலகம் முழுக்க கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம். சீனா உண்மைகளை மறைத்துவிட்டது என்று அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வருகிறார். அதிலும் சீனாவை உலக மேடையில் நிறுத்தி விசாரிக்க வைக்க அவர் முயன்று கொண்டு வருகிறார். சில நாட்களாக சீனாவிற்கு எதிராக பேசாமல் இருந்த டிரம்ப் தற்போது மௌனம் கலைத்து, மீண்டும் சீனா மீது புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டில், நாம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். தங்கள் உறவினர்களை, நண்பர்களை இழந்தவர்களுக்காக நான் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அனைத்து நோக்கத்திற்காகவும் எனது அன்பையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்’’ என டிரம்ப் கூறியுள்ளார்.

அவர் தனது மற்றொரு டிவிட்டில் ’’உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது சீனா இந்த உலகத்திற்கு கொடுத்த மிக மோசமான பரிசு’’ என கூறியிருக்கிறார். இதனால் சீனாவிற்கு அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் அழுத்தம் வர தொடங்கி உள்ளது. ஏற்கனவே சீனா அமெரிக்கா உறவு சரியாக இல்லை. இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக சண்டை போட்டு வருகிறது. அதேபோல் தென் சீன கடல் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை இருக்கிறது. தற்போது டிவிட்டர் மூலம் டிரம்ப் அடுத்த கட்ட புகாரை சுமத்த தொடங்கி உள்ளார்.

click me!