பழிபோட்ட அமெரிக்காவை பழிதீர்த்த சீனா... கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தாக அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published May 8, 2020, 4:50 PM IST

உலக நாடுகளை அலறவிட்டு வந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


உலக நாடுகளை அலறவிட்டு வந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். உலக முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை சுமார் 270,721 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Latest Videos

இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் போட்டி போட்டு கொண்டு கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சில நாடுகள் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை  மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் இத்தாலி கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக அறிவித்திருந்தது. தற்போது சீனாவும் தங்களுடைய நாட்டின் சார்பில் கொரோனா வைரஸின் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்திற்கு சீனா பிகோவாக் (picovacc) எனப் பெயரிட்டுள்ளது. இந்த பிகோவாக் எனப்படும் மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், பிகோவாக் மருந்து குரங்கிற்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து மருந்து செலுத்தப்பட்ட குரங்கை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தியதை அடுத்து, ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது.

மேலும், இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளனர். எனவே சீனா கண்டுபிடித்த இந்த பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இதன் பின் அடுத்தகட்ட பரிசோதனைக்கு சீனா தயாராகி உள்ளது. முன்னதாக கொரோனாவை உருவாக்கியது சீனா தான் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூறிவந்த நிலையில் சீனா தற்போது மருத்து கண்டுபிடித்துள்ளதால் அதிபர் டிரம்ப் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்.

click me!