#UnmaskingChina: 184 நாடுகள் இந்தியாவுக்கு கொடுத்த பேராதரவு...!! வயிற்றெரிச்சலில் வெந்து சாகும் சீனா...!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 20, 2020, 1:55 PM IST

#UnmaskingChina: 184 நாடுகள் இந்தியாவுக்கு கொடுத்த பேராதரவு...!! வயிற்றெரிச்சலில் வெந்து சாகும் சீனா...!!


ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சீனா தனது அதிருப்தி மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் 75ஆவது மன்றத்திற்கான தலைவர் தேர்வு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத 5 உறுப்பினர்களுக்கான தேர்வு, பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. மொத்தத்தில்  ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பினர்களைக் கொண்டதாகும், உலகில் சக்திவாய்ந்த இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 உறுப்பினர்கள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிரந்தரம் அல்லாத உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெல்ஜியம், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போதைய நிரந்தர உறுப்பினர்களாக இருந்துவரும் நிலையில், அவைகளின் பதவிக்காலம்  இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா ஏழு முறை இருந்துள்ளது, இந்நிலையில் மீண்டும் அந்த கௌரவத்தை இந்தியா பெற்றுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 193 ஐ.நா உறுப்பினர்களில் 184 நாடுகள் இந்தியாவை ஆதரித்ததன் விளைவாக இந்தியா ஐ.நா மன்றத்தில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்தியா, மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன, ஆனால்  சீனா இதுவரை வாழ்த்து கூறவில்லை . இந்திய-சீன எல்லையில் இருநாட்டுக்கும் இடையே மோதல் இருந்து வருவதால் இந்தியா மீது சீனா அதிருப்தியில் இருப்பதை  இதன் மூலம் அப்பட்டமாக அது வெளிபடுத்தியுள்ளது. 

 

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்து  பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பெயரளவுக்குக்கூட தன் உரையில்  இந்தியாவின் பெயரை உச்சரிக்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், ஐ.நா உயர்மட்ட உறுப்பினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்,  ஐ.நா சாசனத்தின்படி தொடர்ந்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்த ஒரு முக்கிய அமைப்பாக யூ.என்.எஸ்.சி உள்ளது என்ற அவர்,  ஐ.நா சாசனத்தில் வழங்கப்பட்ட பொறுப்புகளை கூட்டாக நிறைவேற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விரும்புகிறது என கூறினார். ஜெர்மனி, நார்வே, உக்ரைன் போன்ற நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சீனா இந்தியாவின் பெயரை உச்சரிக்கவில்லை,  மற்ற நான்கு நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய  நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ள நிலையில், பல ஆண்டுகளாக இந்தியாவின் பிரதிநிதித்துவத்துக்கு  சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!