
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல மாகாணங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய இந்த வைரஸ் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைளில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி கொண்டே இருந்தது.
இதையும் படிங்க;- https://tamil.asianetnews.com/coronavirus/china-as-a-whole-is-suffering-as-the-virus-is-on-the-rise-again-lockdown-soon-for-china-r8lzu9
ஊரடங்கு அமல்
கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு வெகு வேகமாக சரிந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாக குறைந்திருந்த தொற்று தற்போது அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பீதியில் உலகநாடுகள்
சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சீனாவின் ஷாங்காய், யூசெங், ஜில்லின் பல மாகாணங்களும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்கிற அச்சம் உருவாகி உள்ளது.