#UnmaskingChina:எல்லை தாண்டிய 35 சீனர்களை சொர்கத்துக்கு அனுப்பிய இந்திய ராணுவம்..ரத்தத்திற்கு ரத்தம் என பதிலடி

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 11:40 AM IST
Highlights

சீனப் படையினர்  இந்திய ராணுவத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டுமென்றே தயாராக வந்து இருந்தது அப்போது தெரியவந்தது. இத்தகவலறிந்த கூடுதல் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

லடாக்கின்  கல்வான் பள்ளத்தாக்கில்  இந்தியா மற்றும் சீனா வீரர்களிடையே 3 மணி நேரத்திற்கு மேல் மோதல் நீடித்தது என்றும் அதில் இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , சீனா ராணுவ தரப்பில் 34 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இரவு நடந்த மோதலில், கற்கள் மற்றும் இரும்பு தடிகளால் மோதி கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன ராணுவத்தினர் நுழைந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த கர்னல் சந்தோஷ் பாபு பேச்சுவார்த்தை நடத்த சென்றதாகவும், அப்போது சீனர்கள் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட ராணுவ வீரர்களை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் லடாக்கில் எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சியை சீனா தகர்த்துள்ளது. சீன ராணுவத்தினர் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளனர், அவர்களுடன் அமைதிபேச்சு வார்த்தைக்கு சென்ற இந்திய கட்டளை அதிகாரிகளுடன் அவர்கள் விவாதம் செய்ததுடன் கற்கள் மற்றும் ஆணி பதித்த தடிகளால் சுற்றி நின்று தாக்கியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இருநாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனாலும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நீடித்து வந்தது,  இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறினர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் பீகார் ரெஜிமென்ட் கட்டளை அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு, ராணுவ வீரர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார், அத்துமீறி உள்ளே வந்தவர்களிடம் இரு நாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி இந்திய எல்லைக்குள் நுழையக்கூடாது எனவும்,  உடனே சீன வீரர்கள் தங்கள் எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கர்னல் சந்தோஷ்  பாபு கேட்டுக் கொண்டார்,  கர்னல் சந்தோஷ் பாபு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார், ஆனால் சுற்றியிருந்த சீனர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்ய தொடங்கினார். இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோதே சில சீனார்கள் இந்திய  வீரர்களை இரும்பு தடி, கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர், சீனப் படையினர்  இந்திய ராணுவத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டுமென்றே தயாராக வந்து இருந்தது அப்போது தெரியவந்தது. இத்தகவலறிந்த கூடுதல் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

 

அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்தது, இந்த தாக்குதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்ததாகவும் அதில் கர்னல் சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழநி, சிப்பாய் குண்டன் ஓஜா உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் சீன படையை சேர்ந்த சுமார் 43 பேர் படுகாயமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை சீனா எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை,  இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதிரடி தகவல் ஓன்று வெளியிட்டுள்ளது, அதில் இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 35 சீன ராணுவத்தினர் கொள்ளப்பட்டதாகவும் அதில் ஒரு ராணுவ கட்டளை அதிகாரியும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா இது குறித்து வாய் திறக்கவில்லை.  அதேபோல் இருதரப்பிலும் உள்ள பல வீரர்கள் காணவில்லை எனவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  நள்ளிரவு தொடங்கிய இந்த மோதல் அதிகாலை  வரை நீடித்தது எனவும், இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சிதறிக்கிடந்த  சீனர்களை மீட்க எல்லையில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது மொத்தத்தில் சீன ராணுவம் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது தெரிய வந்துள்ளது.
 

 

click me!