கொரோனா தடுப்பில் கேம் சேஞ்சர்..குறைந்த விலையில் கிடைக்கும் மருந்து..பால் வார்க்கும் பிரிட்டன் கண்டுபிடிப்பு!

By Asianet TamilFirst Published Jun 17, 2020, 8:30 AM IST
Highlights

கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக டெக்சாமிதாஸோன் இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். தற்போது 2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் ஜான்சன் அறிவித்தார். இந்த மருந்து பிரிட்டன் விலையில் 5 பவுண்ட் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய் ஆகும். இந்த மருந்து பிரிட்டனுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் குறிப்பாக ஏழை நாடுகளுக்குப் பயன்படும் என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

பிரிட்டனில் 5 பவுண்ட் விலையில் கிடைக்கும் டெக்சாமிதாஸோன் என்ற மருந்து கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
உலகில் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடிவருகின்றன. பல நாடுகளும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன. இதேபோல ஏற்கனவே புழகத்தில் உள்ள மருந்து, மாத்திரைகள் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்றும் சோதித்து பார்க்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள டெக்சாமிதாஸோன் என்ற மருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்குமா என்பது குறித்து பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.
மூட்டு வலி, அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு பயன்படும் சாதாரண ஸ்டிராய்டு வகை மருந்துதான் டெக்சாமிதாஸோன். இது கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை நோயாளிகளுக்குக் கொடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக  வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை காப்பாற்றும் அளவுக்கு இந்த மருந்து வேலை செய்வதாக பிரிட்டன் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களில் 8 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இந்த மருந்து பயன்பாட்டுக்குப் பிறகு அது 2 ஆக குறைந்துள்ளது. இந்த மருந்தை ஊசியாக செலுத்தியபோது இறப்பு விகிதம் 5-ல் ஒரு பங்காக குறைந்ததை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது.
இதனையடுத்து, கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக டெக்சாமிதாஸோன் இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். தற்போது 2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் ஜான்சன் அறிவித்தார். இந்த மருந்து பிரிட்டன் விலையில் 5 பவுண்ட் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய் ஆகும். இந்த மருந்து பிரிட்டனுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் குறிப்பாக ஏழை நாடுகளுக்குப் பயன்படும் என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் டெக்சாமிதாஸோன் மருந்து தமிழக சுகாதார துறை தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

click me!