#Unmaskingching சீனா அராஜாகம்... இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் என்ன ஆனது தெரியுமா..?

By Thiraviaraj RM  |  First Published Jul 15, 2020, 10:17 AM IST

இந்திய இராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது, சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா மறைத்து வரும் நிலையில், உயிரிழந்த வீரர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இந்திய இராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது, சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா மறைத்து வரும் நிலையில், உயிரிழந்த வீரர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை. சீனாவின் சமூக ஊடகங்களில் பலர் இதைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வெய்போ எனும் சமூகவலை தளத்தில் சீன தணிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினர், அதே நேரத்தில் சீன ராணுவம் அனுபவித்த மொத்த உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மையை கோரி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

ஆனால், தற்போது வரை சீனா இதுவரை எத்தனை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் கூட, சீனா மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சில ஊடகங்கள் சீன இராணுவத்துக்கு நேர்ந்த பாதிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளன. அதில் உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று இராணுவ வீரர்கள் குடும்பத்தை சீன அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

இராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், தொலை தூரத்தில் ஒரு இடத்தில் வைத்து தனித்தனியாக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யுமாறு அந்த நாட்டு அரசு இராணுவ வீரர்கள் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறி சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.இதை அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை காரணமாக வைத்து உடல்களை அடக்கம் செய்யுமாறு இராணுவ வீரர்கள் குடும்பங்களை சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்திற்கு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக சீனா இப்படி செய்வதாக கூறப்படுகிறது.

click me!