300 சிறுமிகளிடம் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்ட கிழவன்..!! சிறையில் எடுத்த பயங்கர முடிவு..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 14, 2020, 7:20 PM IST

பின்னர் அவர்களுடன் தவறாக நடந்து கொண்டு அபெல்லோ அதை படமாக்கியதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.  அவருடன் உடலுறவு கொள்ள மறுத்தவர்களை அடித்து உதைப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரஞ்சு நாட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த மாதம் பிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (65) என்ற பிரஞ்சு நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் தனது அறையில் இரண்டு வயது சிறுமிகளுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அபெல்லோவின் மடிக்கணியை ஆராய்ந்ததில் ஏராளமான ஆபாச வீடியோக்களைக் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 305 சிறுமிகளுடன் சட்டவிரோத பாலியல் செயல்களில் அவர் ஈடுபட்டதை அது உறுதி செய்ததாகவும் போலீசார் கூறினர். 
பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 

Tap to resize

Latest Videos

ஜகார்த்தா காவல்துறை செய்தித் தொடர்பாளர் கமிஷனர் யூஸ்ரி யூனுஸ், வியாழக்கிழமை மாலை அபெல்லோ தனது சிறை அறைக்குள் மின்சார கேபிளைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியதா அறிவித்தார். பின்னர் தூக்கில் தொங்கிய அபெல்லோவை மீட்ட போலீசார் அவரை உடனடியாக கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள சுகம்தோ காவல் மருத்துவமனையில் அனுமதித்தனர்,  அவர் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணம் இந்தோனிசியாவில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதாவது, பிரெஞ்சு நாட்டில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற அப்பெல்லோ, இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு அதற்கான வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வந்தார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற நிலையில், அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ளார். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் அபெல்லோ சுற்றுலா விசாவில் பல முறை தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு வந்தாக போலீசார் தெரிவித்தனர்.வரும்போதெல்லாம் அறையெடுத்து  தங்கிய அவர் குழந்தைகளை அணுகி, அவர்களை அசைவார்த்தை கூறி கவர்ந்திழுப்பார். பின்னர் அவர்களுடன் தவறாக நடந்து கொண்டு அபெல்லோ அதை படமாக்கியதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அவருடன் உடலுறவு கொள்ள மறுத்தவர்களை அடித்து உதைப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவரால் பாதிக்கப்பட்ட 19 பேர் மட்டும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று திரு யூனுஸ் கூறினார். பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணும் முயற்ச்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் என்றும் அவர் கூறினார்.  
அபெல்லோவின் மடிக்கணினியில் உள்ள வீடியோக்களில் உள்ளவர்களையும் தாண்டி அவரது பாலியல் இச்சைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என போலீசார் கூறுகின்றனர். இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் 70,000 குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று உலகளாவிய கடத்தல் தடுப்பு வலையமைப்பு ECPAT International தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!