
அமெரிக்காவை மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த முறை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர் தான் துப்பாக்கிச் சூடுக்கு இறையாக்கப்பட்டுள்ளார். டிரம்பின் முக்கிய ஆதரவாளரும், வலதுசாரி இளைஞர் செயற்பாட்டாளரும், செல்வாக்கு மிக்கவருமான சார்லி கிர்ச் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அனைவர் முன்னிலையிலும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சார்லி கிர்ச், கன்சர்வேடிவ் மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ-வின் நிறுவனர். 31 வயதான சார்லி கிர்ச், அமெரிக்காவின் முன்னணி வலதுசாரித் தலைவராக இருந்தார். டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர், 2024 தேர்தலில் டிரம்ப் அணியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். இளைஞர்களின் மனதைப் புரிந்துகொள்வதில் சார்லிக்கு நிகர் யாருமில்லை என்று டிரம்ப் கூறியிருந்தார். சார்லி கிர்ச் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். இதனால்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை இஸ்ரேலின் உண்மையான நண்பர் என்று அழைத்தார். சார்லி கிர்ச் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி எரிகா, முன்னாள் மிஸ் அரிசோனா யுஎஸ்ஏ வெற்றியாளர், மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டொனால்ட் டிரம்பின் அரசியல் பிரச்சாரத்தில் சார்லி கிர்ச் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப், இளைஞர்களின் மனதைப் புரிந்துகொள்வதில் சார்லிக்கு நிகர் யாருமில்லை என்று கூறினார். சார்லி அனைவராலும் விரும்பப்பட்டவர், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இளைஞர் வாக்காளர்களை டிரம்புடன் இணைப்பதில் சார்லி கிர்ச் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவு குடியரசுக் கட்சிக்குப் பேரிழப்பு. டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ இப்போது அதன் நிறுவனர் இல்லாமல் செயல்பட வேண்டியுள்ளது. இது டிரம்பின் 2028 தேர்தல் உத்தியைப் பாதிக்கக்கூடும். சார்லி கிர்ச்சுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்கா முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.