அழகுத் தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி அசத்திய கனடா பிரதமர் !! குவியும் பாராட்டு !!

By Selvanayagam P  |  First Published Jan 12, 2019, 11:46 AM IST

கனடா  பிரதமர் ஜஸ்டின் டுரூடோ  கனடா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அழகு தமிழில் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தனது குடும்பம் இந்த ஆண்டும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


உலகெங்கும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கலை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.  இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கனடா வாழ் தமிழர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். 

Latest Videos

தமிழில் வணக்கத்துடன்  தொடங்கும்  அவரது ஒரு நிமிட பேச்சு, ஆங்கிலம், கனடா மொழி கலந்து வருகிறது. அதில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனடா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைப் பொங்கல் திருநாளைக் கொண்டாட உள்ளதாக தெரிவித்தார்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்

 

பண்பும், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் கொண்ட பிரதமரை கனடா பெற்றிருப்பது தனிச்சிறப்பு என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

click me!