கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு நிதி உதவி அனுப்புறோம்… ஆனால் மோடி 3 ஆயிரம் கோடி வேஸ்ட்டா செலவு பண்ணி சிலை அமைக்கிறார்!! கடுப்படித்த இங்கிலாந்து எம்.பி. !!

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 12:13 PM IST
Highlights

இந்தியாவின் நன்மைக்காக இங்கிலாந்து பல கட்டங்களாக 9400 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியப் பிரதமர் வேஸ்ட்டாக 3000 கோடி ரூபாய் செலவு செய்து சிலை அமைக்கிறார். இதனால் இந்தியாவிற்கு இனி நிதி உதவி செய்வதை பிரிட்டன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு எம்.பி. பீட்டர் போன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் உரிமை, சோலார் பேனல் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுப்பது  போன்ற பல திட்டங்களை நிறைவேற்ற இங்கிலாந்து பல்வேறு கட்டங்களாக 9400 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3000 கோடி ரூபாயில் இரும்பாலான சிலை அமைக்கப்பட்டு கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இது உலகின் மிகப் பெரிய சிலை , ஒற்றுமையின் சிலை என பாஜகவினர் பெருமைப்பட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இவ்வளவு செலவு செய்து ஒரு சிலை தேவையா ? என எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தற்போது வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் பீட்டர் போன், இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த இங்கிலாந்து பல கட்டங்களாக 9400 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஆனால் இந்தியாவின் பிரதமர் மோடி 3000 கோடி ரூபாய் செலவு செய்து சிலை அமைக்கிறார். இது பொருத்தமற்றது.. இந்தியா அவர்கள் நாட்டில் எவ்வளவே வேண்டுமானாலும் செலவு செய்து விட்டுப் போகட்டும், அது குறித்து நமக்கு கவலை இல்லை. ஆனால் வேஸ்ட்டாக செலவு செய்யும் இந்தியாவுக்கு நாம் ஏன் நிதியுதவி  செய்ய வேண்டும் என எம்.பி. பீட்டர் போன் கடுமையாக பேசினார்.

இனிமேல் இந்தியாவுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது என அவர் திட்டவட்டமாக பேசினார். இங்கிலாந்தைவிட அதிக பணக்கார்க்ள் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும் பீட்டர் போன் கடுமையாக விமர்சனம் செய்தார்,

 

click me!