ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் என்ற மருந்து கலவை கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர் . ஒட்டுண்ணியை கொள்ளும் மருந்தான ஐவர்மெக்டின்னுடன் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தான டாக்ஸிசைக்கிளின் கலப்பதன் மூலம் இந்த புதிய மருந்தை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வெறும் நான்கு நாட்களில் குணப்படுத்தும் வகையில் புதிய மருந்து கலவை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பங்களாதேஷ் மருத்துவ குழுவினர் அறிவித்துள்ளனர். இரு வேறு மருந்துகளை கலந்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியதன் மூலம் அனைத்து நோயாளிகளும் குணமடைந்ததாக மருத்துவ குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , உலகளவில் சுமார் 49 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரை உலக அளவில் மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் . அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இதற்கு பிரத்யேக தடுப்பூசி இல்லாததால் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் நோக்கில் இரவு பகல் பாராமல் மருந்து ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர் . ஹைட்ரோகுளோரிக் முதல் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் இந்த வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில் பங்களாதேஷின் பிரபல மருத்துவ பேராசிரியர் தாரிக் மற்றும் அவரது குழுவினர் புதிய மருந்து கலவை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் என்ற மருந்து கலவை கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர் . ஒட்டுண்ணியை கொள்ளும் மருந்தான ஐவர்மெக்டின்னுடன் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தான டாக்ஸிசைக்கிளின் கலப்பதன் மூலம் இந்த புதிய மருந்தை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 நோயாளிகளுக்கு இந்த மருந்து கலவையை செலுத்தியதன் மூலம் வெறும் நான்கு நாட்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்ததாக தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது இந்த மருந்து ஆராய்ச்சியினை சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல அரசாங்கத்தின் உதவியுடன் முயற்சித்து வருவதாக முகமது தாரிக் தெரிவித்துள்ளார் , இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ரபியுல் மோர்ஷித், மருந்து கொடுத்த பிறகு கொரோனா நோயாளிகளின் அறிகுறிகள் மூன்று நாட்களில் 50% குறைந்ததாகவும் அவர்கள் வெறும் 4 நாட்களில் குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் .