
வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனவர்களின் எண்ணிக்கை 130-ஆக உயர்ந்துள்ளது.
வங்க தேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிக சேதத்திற்குள்ளான ரங்கமாதி மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க சென்ற ராணுவ வீரர்கள் நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மக்கள் தூங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல குழந்தைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் மண்ணில் புதைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100-க்கம் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் சுற்றுப்புற சுவர்கள் இடிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.