ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி..!! : நாடாளுமன்ற உறுப்பினா் காோிக்கை!

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 11:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி..!! : நாடாளுமன்ற உறுப்பினா் காோிக்கை!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நியூ சவுத் வெல்ஸ் நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் அவசியம். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு தமிழ் மொழியை தேசிய பாடத்தித்தில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் மொழி கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் சமகால மாணவர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் இது பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை..! பாகிஸ்தானில் அமெரிக்கா -விரிக்கும் வலை..!
Energy Lockdown: ஈரான் போரால் உலகத்துக்கு புது சிக்கல்? 'எனர்ஜி லாக்டவுன்'னா என்ன தெரியுமா?