இனி கொரோனாவால் யாரும் சாகக்கூடாது..! மனித குலத்திற்கு நம்பிக்கையளிக்கும் ஆஸ்திரேலிய மருந்து

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 11:13 PM IST
Highlights

கொரோனா வைரஸ் ரத்தத்தை உறையவைத்து ஆக்ஸிஜன் சப்ளையை தடுத்துத்தான் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா வைரஸால் ரத்தம் உறைவதை தடுக்க, ஆஸ்திரேலிய பேராசிரியர், ஆய்வாளர்களுடன் இணைந்து மருந்து கண்டுபிடித்துள்ளார். 
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் 78 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 4 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை குணப்படுத்துவதற்கான சரியான மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்துவதை தடுக்க ஆஸ்திரேலிய பேராசிரியர், விஞ்ஞானிகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடித்துள்ளார். அந்த ரத்தம் உறைவதை தடுத்து உயிரிழப்பை தடுக்கும். 

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை. அந்த நாட்டில் வெறும் 7,302 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில், 6812 பேர் குணமடைந்த நிலையில், 102 பேர் உயிரிழந்தனர். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கிறது. உடலில் உள்ள கொரோனா வைரஸ், ரத்தத்தை உறையவைப்பதுதான் மூச்சுத்திணறலுக்கு காரணம். கொரோனா வைரஸ் ரத்தத்தை உறையவைத்து, ஆக்ஸிஜன் சப்ளையை தடுக்கிறது. ஆக்ஸிஜன் சப்ளை தடைபடுவதால் தான், உடலுறுப்புகள் செயலிழந்து,  பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். 

எனவே ரத்தம் உறைவதை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் ஷாவுன் ஜாக்ஸன். அவர் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து ரத்தம் உறைவதை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த மருந்தின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றது. இரண்டாம் கட்ட சோதனை நடந்துவருகிறது. இரண்டாம் கட்ட சோதனையும் முடிந்து இன்னும் ஒருசில மாதங்களில் உலகம் முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்து சந்தைக்கு வந்துவிட்டால், கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் ஷாவுன் நம்புகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் ஷாவுன் ஜாக்ஸன்., கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படாத நிலையை உருவாக்க மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வை முன்னெடுத்தோம். இந்த மருந்தால் உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 
 

click me!