ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் இறந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் இறந்து இருப்பதாக அந்த நாட்டு அரசாங்கமே செய்தி வெளியிட்டுள்ளது. மோசமான கத்திக்குத்து சம்பவத்தில் பலர் இறந்து இருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.
சிட்னியின் ஷாப்பிங் மையமான வெஸ்ட்பீல்ட் பாந்தி ஜங்ஷனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று காலை ஷாப்பிங் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கத்தியால் குத்தியும் உள்ளனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷாப்பிங் மையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், மையத்திற்கு இருந்தவர்களை வெளியேற்றினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷாப்பிங் மையத்திற்குள் இன்னும் சிலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒன்பது மாத குழந்தையையும் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுவரை நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
BREAKING: Multiple people injured in stabbing at Westfield Bondi Junction Shopping Centre in Sydney - 9Newspic.twitter.com/4ZsR83SyPk
— BNO News (@BNONews)