“ஆஸ்திரேலியா மாணவருடன் ஈரோடு பெண்ணுக்கு டும்...டும்...டும்...” - தமிழ் கலாச்சாரத்தில் நடந்த திருமணம்

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
“ஆஸ்திரேலியா மாணவருடன் ஈரோடு பெண்ணுக்கு டும்...டும்...டும்...” - தமிழ் கலாச்சாரத்தில் நடந்த திருமணம்

சுருக்கம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மைதிலி. இருவரும் ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர்கள். இவர்களுக்கு மஹிமா (26) என்ற மகளும், ராஜேஷ் (21) என்ற மகனும் உள்ளனர்.
மஹிமா, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில், ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெய்ன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இதைதொடர்ந்து மஹிமா, தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர் பிரெய்ன் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பை, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினர். இதைதொடர்ந்து அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி நேற்று அவர்களுக்கு திருமணம் நடந்தது.
மொடக்குறிச்சி அருகே, ஒரு திருமண மண்டபத்தில், மஹிமா - பிரைன் ஜோடிக்கு, நேற்று திருமணம் நடந்தது. பூணுால் மற்றும் மாலை அணிந்து மணமகன் பிரைன், திருமணத்தில் பங்கேற்றார். தமிழ் கலாச்சாரப்படி, மந்திரங்கள் முழங்க நடந்த இந்த திருமணத்தில் மணமகன் வீட்டார் ஆண்கள், வேட்டியும், பெண்கள் சேலையும் அணிந்து இருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் மொத்த வறுமையும் ஒழிய... இந்தியாவிடம் உள்ள 2 தீர்வுகள்
இந்தியா அணு குண்டால் தாக்கக்கூடாது... மீறினால் பேரழிவுதான்.. கெஞ்சும் பாகிஸ்தான்..!