#UnmaskingChina:சீனாவை ஆத்திர மூட்டும் ஆஸ்திரேலியா..!! ஜி ஜின் பிங்கை டாராக கிழித்த ஆப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2020, 6:28 PM IST
Highlights

ஹாங்காங்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அவர்களை சித்திரவதை செய்ய இப்புதிய சட்டத்தை பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்த நிலையில், 

ஹாங்காங்கில் சீனா, தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங் பிரஜைகளை நாடு கடத்துவதற்கான இருநாட்டு  ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்தி வைத்துள்ளது. ஹாங்காங்கில் சீனா கொண்டுவந்துள்ள பாதுகாப்பு சட்டம் ஹாங்காங் மக்களின் உரிமையை நசுக்குகிறது என்றும் அது எச்சரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஹாங்காங்கிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது சீனாவை மிகுந்த எரிச்சலைடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. இது நாளடையிவில் வர்த்தக போராகவும் மாறியுள்ளது. அதே வேளையில் ஆஸ்திரேலிய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்குமான உறவு மேலும் விரிசலடைந்துள்ளது. 

பிரிட்டிஷ் காலனியில் இருந்த ஹாங்காங், 1997இல் சீனாவிடம்  ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றுதல் போன்ற அதிகாரங்களுடன் சுய ஆட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்படும் என்றும், பாதுகாப்பு விவகாரங்களில் மட்டும் சீனா உதவ வேண்டுமென்றும் பிரிட்டன்-சீனா இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் காலபோக்கில் ஹாங்காங்கை சீனா தனது நாட்டில் இரு பகுதியாகவே பாவிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தை அமல்படுத்துவதுடன் ஹாங்காங்கை முழுவதுமாக தன் கட்டுக்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டுவருகிறது. இதனால் ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு என்ற சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியுள்ளது. இதனால் பலர் இச்சட்டத்திற்கு அஞ்சி ஹாங்காக்கை விட்டு குடும்பம் குடும்பமாக  வெளியேறி, பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சீனாவின் புதிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் வேட்டுவைக்கும் சட்டம் என்று விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமையை வழங்க முன்வந்துள்ள ஆஸ்திரேலியா, சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை சொந்த நாட்டிடம் ஒப்படைக்கும் வகையில் நாடுகளுக்கு இடையே நாடுகடத்தல்  ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் இருந்து வந்த நிலையில், தற்போது சீனாவின் புதிய சட்டத்தால், ஹாங்காங் உடனான நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங்கே சேர்ந்த நபர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்த ஹாங்காங்கிற்கு அனுமதி இல்லை என்பதே அதன் பொருள். ஏனெனில் சீனாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பல ஹாங்காங் நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீண்டும் ஹாங்காங்குக்கு நாடுகடத்த முயற்சிகள் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா இந்த தடையை விதித்துள்ளது. இது சீனாவுக்கு மிகுந்த எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சீன தூதரகம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் விஷயத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஆஸ்திரேலியாவிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

இல்லையெனில் ஒரு பாராங்கல்லை எடுத்து தன் காலில் போட்டுக் கொள்வதற்கு சமமான பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும் சீனா மிரட்டியுள்ளது. ஆனாலும் அதை பொருட்படுத்தாத ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் தங்கியுள்ள ஹாங்காங் மக்களுக்கான விசா காலத்தை நீட்டிக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வணிக  நோக்கத்துடன் வரும் ஹாங்காங்கியர்களை ஆஸ்திரேலியா ஊக்குவிக்கவும் என்றும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பயின்றுவரும்  ஹாங்காங் மாணவர்களுக்கான விசாவை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கவும், அவர்கள் படித்து முடித்த பின்னர் ஆஸ்திரேலியாவிலேயே தங்குவதற்கான குடியுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அவர்களை சித்திரவதை செய்ய இப்புதிய சட்டத்தை பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள்  சீனாவை பெருத்த கோபமடைய செய்துள்ளது. ஆஸ்திரேலியாவை போலவே கனடாவும் ஹாங்காங் நாட்டுடனான நாடு கடத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 3 மில்லியன் ஹாங்காங்  மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் சட்டத்தை பிரிட்டன் முன்மொழிந்துள்ளது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் பிற  வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹாங்காங்கில் வசித்து வருகின்றனர். 

அவர்களும் சீனா கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால், ஆஸ்திரேலியா தனது  குடிமக்களையும் வெளிநாட்டு பிரஜைகளையும் எச்சரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு  மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம், சீனாவின் தேசிய பாதுகாப்பு என்ற சட்டத்தின் மூலம்  நீங்கள் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. புதிய சட்டம் குறித்து உங்களுக்கு அச்சம் ஏற்படின் நீங்கள் ஹாங்காங்கில் தங்குவதா இல்லை என்பது குறித்து உடனே பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. அதேபோல் நியூசிலாந்தும் சீனாவின் புதிய சட்டத்தை எச்சரித்துள்ளதுடன் நாடு கடத்தும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் சமீபத்திய அறிவிப்பு மற்றும் நடவடிக்கைகளால் சீனா-ஆஸ்திரேலியா ஆகிய இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும்  உலக நாடுகள் கருதுகின்றன. 
 

click me!