பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் உண்மையா? அவர் இத்தனை நிகழ்வுகளை கணித்துள்ளாரா?

By Ramya s  |  First Published Jun 21, 2023, 5:40 PM IST

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா உலகின் பல முக்கிய நிகழ்வுகள் முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது.


பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, எதிர்காலத்தை பற்றிய தனது துல்லியமான கணிப்புகளுக்காக பிரபலமானவர். பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டவர்.

பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள்:

Tap to resize

Latest Videos

உலகம் 5079- ஆண்டில் அழியும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்., 2021 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க நில அதிர்வு மற்றும் எரிமலை நடவடிக்கைகள் இருக்கும் என்று பாபா வங்கா எழுதினார். மேலும், வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் என்றும் அவர் கணித்திருந்தார். 2022 ஆம் ஆண்டில், பாபா வங்கா ஒரு புதிய தொற்றுநோயைக் கணித்திருந்தார். கொரோனா பரவியதால், பாபா வங்காவின், இந்த வாசகமும் துல்லியமாக இருந்தது.

2023 ஆம் ஆண்டை பொறுத்தவரை பாபா வங்கா இந்த ஆண்டிற்கான பல மோசமான கணிப்புகளைச் செய்துள்ளார். சூரிய புயல்கள், பருவம் தவறி பெய்யும் மழை, துருக்கி நிலநடுக்கம், பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள், ஒரு பெரிய நாட்டின் உயிரியல் ஆயுத சோதனை, வேற்றுகிரகவாசிகள் படையெடுப்பு மற்றும் புதிய தொற்றுநோய்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். இவையனைத்தும் தொடர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாம் பொய்யா?

இருப்பினும், பாபா வாங்காவின் பெரும்பாலான கணிப்புகள் இணையவாசிகளால் உருவாக்கப்பட்டவை என்று ஊடக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபா வாங்கா சொன்ன எதையும் புத்தக வடிவில் எழுதவில்லை. ஆனால், அவரைப் பற்றியும், அவருடைய சக்திகள் மற்றும் தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் பல புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, பாபா வாங்கா தீர்க்கதரிசனம் நவீன யுகத்தின் கட்டுக்கதையா? இது இணையத்தின் உருவாக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த பாபா வங்கா?

பாபா வங்கா 1911 இல் வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். இருப்பினும், அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் வாழ்ந்தார். இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டரோவா. அவரது வாழ்நாளில், எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசனம் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காக புகழ் பெற்றார். பாபா வங்கா, தனது 12-வது வயதில் மிகப்பெரிய புயலில் சிக்கி, தனது பார்வையை இழந்தார். எனினும் அதன்பிறகு அவர், தனது எதிர்காலத்தை பற்றி கணிக்க தொடங்கினார். அவரது கணிப்புகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை, அவர் பிரபலமான நோஸ்ட்ராடாமஸுடன் ஒப்பிடப்பட்டார்.

click me!