தீவிரவாதிகளிடமே தீவிரவாதத்தை ஒழிக்க ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா..!! தாலிபன்களிடம் டோட்டலாக சரண்டரான ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2020, 1:11 PM IST
Highlights

என்னென்ன செய்யப் போகிறோம் என அவர்கள்   உறுதியளித்துள்ளார்களோ அதை செய்வார்கள் என  நம்புகிறேன் ,  தீவிரவாதிகளை இனி அவர்கள் அழைப்பார்கள்.  மிகமோசமான சிலரை  அவர்கள் கொல்வார்கள் .  சண்டையை அவர்கள் தொடங்குவார்கள் .

தாலிபன் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டர்ம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் . ஆப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் நடத்தி வந்த நிலையில் ,  தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது .  தாலிபன்கள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ள நிலையில் அமெரிக்க  அதிபர் இம்முடிவை எடுத்துள்ளார் . கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது .  தாலிபன்களி டமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டு மக்களாட்சி மலர அமெரிக்கா  உதவி செய்தது .  கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நோட்டோ படைகள்  பாதுகாப்பு பணியில்  இருந்து வருகிறது.   

இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற அமெரிக்க அதிபர் முடிவு  செய்துள்ளார் .  சுமுகமான முறையில் அதை செய்வதற்கு தாலிபான் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் முடிவு செய்தார் .  அதன்படி கத்தார் நாட்டின்  தோகாவில் அமெரிக்கா மற்றும்  தாலிபன்  பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது .  இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொண்டார் .  இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது . இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது.  இவ் ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளரை சந்தித்து அதிபர் ட்ரம்ப் ,  தாலிபன் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திக்க உள்ளேன் என்றார்.

 என்னென்ன செய்யப் போகிறோம் என அவர்கள்   உறுதியளித்துள்ளார்களோ அதை செய்வார்கள் என  நம்புகிறேன் ,  தீவிரவாதிகளை இனி அவர்கள் அழைப்பார்கள்.  மிகமோசமான சிலரை  அவர்கள் கொல்வார்கள் .  சண்டையை அவர்கள் தொடங்குவார்கள் .  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதில் ஆப்கனிஸ்தானில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம் .  இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் வீரர்களை திரும்ப பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது .  ஆப்கானிஸ்தானில் உள்ள 13,000 அமெரிக்க வீரர்களிற் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைக்க உள்ளோம்.   சிரியா ,  ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்ன் ஆதிக்கத்தை 100% ஒடுக்கிவிட்டோம் .  இதில் ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நடந்ததைப் போலவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை  கொன்றுள்ளோம்.   ஆனால் இப்போது அந்த பணியை வேறு யாராவது செய்ய வேண்டிய நேரமிது .  அது தாலிபன்களாகவும் சுற்றியுள்ள நாடுகளாகவும் இருக்கலாம் .  ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகள் உதவ தயாராக உள்ளன என  ட்ரம்ப் கூறினார் .

 

click me!