அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவு..!! முழு விவரம் உள்ளே..!!

By Ezhilarasan Babu  |  First Published May 22, 2020, 12:32 PM IST

உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த 3 நாட்களுக்கு அமெரிக்க தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 


அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துவரும் நிலையில்  அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் .  கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாண வுஹானில் தோன்றிய கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது,  150க்கும்  அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ,  உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின்  எண்ணிக்கை  51 லட்சத்து 97 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  இதுவரை  மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 650 பேர் உயிரிழந்துள்ளனர் .  அதே போல் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த வைரஸ் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்துள்ளது .  இதுவரை அங்கு 16 லட்சத்து 20 ஆயிரம்  பேரை கொரோனா தாக்கியுள்ளது .சுமார் 96 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர் . 

Latest Videos

இன்னும் ஒரு சில நாட்களில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என  அஞ்சப்படுகிறது ,  இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும் அதில் பலன் இல்லை ,  இதனால் விரக்தியின் உச்சத்தில் வைரசை கட்டுபடுத்த முடியாமல் திணறிவருகிறது.  அந்நாட்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவர போராடி வருகின்றனர் .  இது அமெரிக்காவில் வரலாறு காணாத பேரிழப்பாக கருதப்படுகிறது .  அதுமட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து கடனாளிகளாக தவித்து வருகின்றனர்,  இந்த நிலைமை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர் . இந்நிலையில் கொடிய வைரசுக்கு  தங்கள் உடன் பிறப்புகளை சொந்த பந்தங்களை இழந்து அமெரிக்க மக்கள் கண்ணீரில் மூழ்கி உள்ள நிலையில் , உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த 3 நாட்களுக்கு அமெரிக்க தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அரசு அலுவலக கட்டிடங்கள் , தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் .  இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர் , கொரோனா வைரசில் உயிரிழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த 3 நாட்களுக்கு அமெரிக்க தேசிய கொடிகளை  அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும்,  நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக இதைச் செய்ய வேண்டும் , அதேபோல் வரும் திங்கட்கிழமை அன்று  தேசிய விடுமுறையுடன் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் ,  நம் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் அவர்களை கவுரவிக்கும் வகையிலும் இதைச் செய்ய வேண்டும் என அரசியல்  தலைவர்கள் தம்மிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார் .

 

click me!