தவறான பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்காவை துண்டாட சீனா துடிக்கிறது..!! ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan Babu  |  First Published May 21, 2020, 12:08 PM IST

இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்  " ஜோ பிடன் "  வெற்றி பெற வேண்டுமென நாடு விரும்புவதாக சீனா தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். 
 


இந்த ஆண்டு அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் " ஜோ பிடன் " வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என சீனா தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் .  அமெரிக்க  ஜனாதிபதியாக ஜோ பிடன் வெற்றிபெற வேண்டுமென சீனா விரும்புகிறது , அதன் மூலம் தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள இது துடிக்கிறது என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது . இதுவரையில் உலக அளவில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது .  கிட்டத்தட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது .  

Latest Videos

மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா தாக்கும் மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் ,  இந்த வைரஸால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போயுள்ளன . இதனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பி உள்ளது . ஏற்கனவே சீனாவுக்கும் இடையே அமெரிக்காவுக்கும் வர்த்தக போர்  நீடித்து வரும் நிலையில் ,  தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளுக்கும்  பொருளாதார பேரழிவுக்கும் சீனா தான் காரணம் என அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா ,  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ட்ரம்ப் சீனா மீது  இப்படிபட்ட வெறுப்புப் பிரச்சாரங்களை செய்துவருகிறார் என  சீனா கூறிவருகிறது.  ட்ரம்புக்கும்   சீனாவுக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் ,  தனது ட்விட்டர் பக்கத்தில் சீனா குறித்து  கருத்து ஒன்று பதிவிட்டுள்ள ட்ரம்ப். அதில்,  இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்  " ஜோ பிடன் "  வெற்றி பெற வேண்டுமென நாடு விரும்புவதாக சீனா தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.  

மேலும் " ஜோ பிடன் " ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என சீனா ஆசைப்படுகிறது ,  அதன்மூலம் தங்களின் நீண்ட கனவான அமெரிக்காவை துண்டாடும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என சீனா துடிக்கிறது .  நான் வருவதற்கு முன்னர்வரை அமெரிக்காவுக்கு  செய்தது போல மீண்டும் செய்யலாமென சீனா திட்டமிடுகிறது என பதிவிட்டுள்ளார்.  அதுமட்டுமின்றி சீனாவின் செய்தி தொடர்பாளர்கள்  தொடர்ந்து முட்டாள்தனமான கருத்துக்களை கூறி வருகின்றனர் .  உலகம் முழுவதும் சீனாவால் பரவியுள்ள வேதனையையும் படுகொலைகளையும் திசை திருப்ப அவர்கள் முயற்ச்சி  செய்கின்றனர்.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான சீனாவின் தவறான தகவல்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரச்சாரத் தாக்குதல்கள் மிகவும் அவமானகரமானது என ட்ரம்ப் டுவிட் செய்துள்ளார் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் ,  கொரோனாவால் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்து வெளியேறிவரும் நிலையில் ,  நோய் தொற்றுக்கு காரணமான சீனா மீது அமெரிக்கர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் .  எனவே இது தேர்தலில் எதிரொலிக்கும் என கூறுகிறார் என ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன . 

 

 

click me!