வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் . அப்போது பேசிய அவர் , கொரோனா வைரசை சீன வைரஸ் என குறிப்பிட்டு கருத்து கூறினார்.
கொரோனா வைரஸை சீன வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளதைத் தொடர்ந்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் வைரஸ் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா சீனா இடையே மோதல் வெடித்துள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியதால் இதுவரை உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
சீனாவைத் தொடர்ந்து இத்தாலி ஈரான் தென்கொரியா பிரான்ஸ் இங்கிலாந்து ஜெர்மனி ஸ்பெயின் அமெரிக்கா என 75 சதவீத நாடுகளில் இந்த வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் உலகமே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் . வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் . அப்போது பேசிய அவர் , கொரோனா வைரசை சீன வைரஸ் என குறிப்பிட்டு கருத்து கூறினார்.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . ட்ரம்பின் கருத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது அமெரிக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என கூறியுள்ளார் . இந்நிலையில் இது குறித்து தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சுவோ லிஜியான் இதுபோன்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார் . சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 2158 பேர் இந்த வைரசுக்கு உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .