அவர்கள் அறிவியலைப் புறக்கணிப்பது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என ட்ரம்பை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கப் பொருளாதார சரிவுக்கு அவர் வழிவகுத்தார் என்றும், எனவே மக்கள் ஒன்றிணைந்து அவரை தோற்க்கடிக்க வேண்டுமென ஜனநாயகக் கட்சி எம்.பி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது.வருகிற நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த எம்.பி சாண்டர்ஸ், அமெரிக்கா ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது எனக் கூறினார். வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு ஜோ- பிடனையும், துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸையும் தேர்ந்தெடுக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய சாண்டர்ஸ், நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
நமது பொருளாதாரத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. எங்கள் கிரகம் ஆபத்தில் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸை நமது அடுத்த ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் தேர்வு செய்ய வேண்டும் என்றார். குடியரசு கட்சியின் தலைவர்கள், அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் அறிவியலைப் புறக்கணிப்பது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என ட்ரம்பை சரமாரியாக தாக்கியுள்ளார். அதேநேரத்தில் கொரோனா வைரஸை கையாளும் முறைகளுக்காக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவும் ட்ரம்பை சரமாரியாக தாக்கினார்ழ அவர் கூறியதாவது, எங்கள் பிரச்சினைகள் covid-19 விட அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். covid-19 ஒரு அறிகுறி ஒரு நோயல்ல, நம் நாடு கடுமையான நெருக்கடியில் உள்ளது என கூறினார்.