சீனாவின் குரூர புத்தியை அம்பலப்படுத்திய அமெரிக்கா..!! பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 12:10 PM IST
Highlights

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றன.

வடக்கில், இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது எனவும், இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சினைகள் ராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு குழு தலைவர் எலியட் ஏங்கல் வலியுறுத்தியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. எல்லை பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், காஷ்மீர் மற்றும் லடாக் எல்லையில்,  இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இருநாட்டின் ராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை வடக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகில் தங்களது பகுதியில் குவித்து வருகின்றன. இதனால் எல்லையில் அசாதாரன சூழல்  ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக தூதரக  ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதேபோல் இந்திய தரப்பும் பிரச்சனையை அமைதியாக தீர்க்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஆனால் இருநாடுகளும் எல்லையில் தலா 5 ஆயிரம் வீரர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.  சீனா ஒரு முடிவுக்கு வரும்வரை இந்திய ராணுவம் பின்வாங்காது என இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றன.

இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு குழு தலைவரான எலியட் ஏங்கல், லடாக்கில் இந்திய எல்லைப்பகுதிகளில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது, இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க சீனா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்,  இந்தியாவுடனான சீனாவின்  நடவடிக்கை குறித்து கவலைப்படுகிறேன், சர்வதேச சட்டத்தின் படி மோதல்களை தீர்ப்பதற்கு பதிலாக தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்த தயாராக இருப்பதாக சீனா மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தியாவில் எல்லைக்கோட்டை சீனா மதிக்க வேண்டும், போர் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட வழிமுறைகளை சீனா பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

 

click me!