Israel Hamas War : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸின் மூத்த அதிகாரி அலி பராகா, "ஒரு நாள் அமெரிக்கா கடந்த காலத்தின் சுவதாக மாறி, சோவியத் ஒன்றியம் போல் சரிந்துவிடும் என எச்சரித்ததாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 2ம் தேதி அன்று லெபனான் நாட்டை சேர்ந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அலி பராக்கா இந்த கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. "அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகளாவிய ஃப்ரீமேசன்ரியால் நிறுவப்பட்டது, மேலும் அது சோவியத் ஒன்றியத்தைப் போலவே சரிந்துவிடும்" என்று ஜெருசலேம் போஸ்ட், மத்திய கிழக்கு ஊடக ஆராய்ச்சி நிறுவனத்தால் மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலில் அலி பராகா கூறியதாக மேற்கோள் காட்டினார்.
"அமெரிக்காவின் அனைத்து எதிரிகளும் பிராந்தியத்தில் ஆலோசனை செய்து நெருங்கி வருகிறார்கள் என்றும், அவர்கள் ஒன்றாக போரில் சேரும் நாள் வரலாம் என்றும், மேலும் அமெரிக்காவை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றும்" என்று ஹமாஸ் அதிகாரி அந்த பேட்டியில் எச்சரித்தார் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
"அமெரிக்கா சக்திவாய்ந்ததாக இருக்காது," என்று அவர் கூறினார். அமெரிக்காவை தாக்கும் வடகொரியாவின் திறனையும் அலி பராக்கா பாராட்டினார். "ஆமாம். உங்களுக்குத் தெரியும், வட கொரியாவின் தலைவர், ஒருவேளை அமெரிக்காவைத் தாக்கும் திறன் உலகில் ஒரே ஒருவராக இருக்கலாம் என்றும் அலி பராக்கா கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், "எவ்வாறாயினும், அமெரிக்காவை தாக்கும் திறன் வட கொரியாவுக்கு உள்ளது. வட கொரியா தலையிடும் நாள் வரலாம், ஏனென்றால் அது (எங்கள்) கூட்டணியின் ஒரு பகுதியாகும்". ஹமாஸ் தூதுக்குழு சமீபத்தில் மாஸ்கோவிற்குச் சென்றதாகவும், ஒருவர் பெய்ஜிங்கிற்கும் பயணிக்கவுள்ளதாகவும் ஹமாஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் மிகப்பெரிய பயங்கவாத தாக்குதல்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..
"இன்று, ரஷ்யா எங்களை தினசரி அடிப்படையில் தொடர்பு கொள்கிறது. சீனர்கள் தோஹாவுக்கு தூதர்களை அனுப்பினர், சீனா மற்றும் ரஷ்யா ஹமாஸ் தலைவர்களை சந்தித்தனர். ஹமாஸ் பிரதிநிதிகள் மாஸ்கோவிற்கு பயணம் செய்தனர், விரைவில் ஒரு தூதுக்குழு பெய்ஜிங்கிற்கு பயணிக்கும்" என்று ஜெருசலேம் போஸ்ட் அவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D