ஐயோ.. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 32 ஆயிரம் பேர்..! பிறப்பிடம் சீனாவில் 32 பேர்.. என்ன கொடுமை இது..!

By Manikandan S R SFirst Published Apr 4, 2020, 7:38 AM IST
Highlights

அமெரிக்காவில் ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட, சீனாவில் 32 பேர் தான் பாதிக்கப்படும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா நோய் தற்போது கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் உலகின் மற்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை கொரோனா வைரஸ் உண்டாகி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா என உலகின் 200 நாடுகளில் மெல்ல மெல்ல கால்பதித்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 32,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,77,161 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1,320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 7,391 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது இயல்பு நிலை மெல்ல திரும்பியிருக்கும் நிலையில் நேற்று அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 மட்டுமே ஆகும். அமெரிக்காவில் ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட, சீனாவில் 32 பேர் தான் பாதிக்கப்படும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.

அமெரிக்காவிற்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 1,15,242  ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 4,585 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக நாட்டில் இதுவரையில் 16,681 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயிருக்கிறது.

அதே போல ஸ்பெயின் - 7,134, ஜெர்மனி - 6,365, பிரான்ஸ் - 5,233 ஈரான் - 2,715 இங்கிலாந்து - 4,450 பேர் என நேற்று ஒரே நாளில் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 58,149 ஆக அதிகரித்திருக்கிறது. 

click me!