
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க அதபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப். பெரும் செல்வந்தரான டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே சர்ச்சையில் சர்ச்சையில் சிக்கியவர்.
தேர்தலில் வெற்றி பெற டிரம்புக்கு ரஷ்யா உதவியதாக தகவல்கள் வெளியானது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷ்யா தன் கரம் கறைபடியவில்லை என்று உரக்கக் கூறியது.இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விசாரணை வளையத்திற்குள் தாம் இல்லை என்று தனது வழக்கறிஞர்கள் மூலம் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
அதிபர் நாற்காலியில் அமர்ந்த நொடியே அகதிகள் கொள்கையில் மாற்றம், மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர், ஹெச்.1.பி விசாவில் சீர்திருத்தம், என பல அதிரடிகளை மேற்கொண்டு வந்த டிரம்ப் அடுத்த எடுத்தது இப்தார் நோன்பு.
பில் கிளின்டன் அதிபராக இருந்த காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது. டிரம்ப் பதவியேற்றதும் இவ்வழக்கத்தை கை விட உத்தரவிட்டார்.
இதற்கிடையே நாளை ஈகைத் திருநாளான ரம்ஜான் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “'அமெரிக்க மக்கள் சார்பிலும், என் மற்றும் என் மனைவி மெலனியா சார்பிலும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விடுமுறை நாளில் கருணை, அரவணைப்பு மற்றும் நல்லெண்ணங்கள் வளர்த்துக் கொள்வதை நினைவு கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.