ஈராக்கில் இருந்து தனது ராணுவத்தை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் அல் ஆசாத் பகுதியிலிருந்த அமெரிக்காவின் விமானப் படைத்தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கில் தனது ராணுவத்தை அமெரிக்கா குவித்து வருவதால் இது ஈராக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது . அதேநேரத்தில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது . அதில் ஈராக் நாட்டின் படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
மேலும் அந்நாட்டின் உளவுப்பிரிவு தலைவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர் , இச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இந்நிலையில் சல்மானியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அமெரிக்காவுக்கு எதிராக முழங்கினார் , அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது . இராணுவத்தளபதி சுலைமானியின் படுகொலைக்கு பழி தீர்க்கப்படும் எனவும் ஈரான் சூளுரைத்தது, இந்நிலையில் ஈராக்கில் தனது படைகளை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது . இது ஈராக் ராணுவத்தை மேலும் கோபமடைய செய்துள்ளது . இந்நிலையில் ஈராக்கில் இருந்து தனது ராணுவத்தை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் அல் ஆசாத் பகுதியிலிருந்த அமெரிக்காவின் விமானப் படைத்தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இது அமெரிக்காவை கோபம் அடையச் செய்துள்ளது . இது சுலைமானின் மரணத்திற்காக பழிக்குப் பழிவாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது . இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ள நிலையில் தங்கள் நாட்டுப் படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது, ஆனாலும் ஈரானுக்கும் பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது அது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுவருவதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.