அமெரிக்கா - ஈரான் போர்... எங்கேபோய் முடியப் போகிறதோ ஆண்டவா...!! முழு ராணுவத்தையும் இறக்குகிறது பென்டகன்...!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 8, 2020, 12:25 PM IST

இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் போர் நடத்த தயாராகி வருகிறது .


ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க முப்படைகளும் தயாராக இருக்க அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக  அதிபர் டிரம்ப் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது .  ஈரானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மற்றும் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது ,  இன்று மாலைக்குள் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Latest Videos

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கப் படைகள் கடந்தவாரம் ஆளில்லா விமானம் மூலம்   பாக்தாத் விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்தியது , இதில் ஈரான் ராணுவ படையின் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார் .  இந்நிலையில் ஈரான் அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ளது  , தங்கள் மீதான தாக்குதலுக்கு  அமெரிக்கா  எண்ணி எண்ணி வருந்தும் அளவில்  தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈராக் எச்சரித்தது இந்நிலையில் பக்கத்திலிருக்கும் அமெரிக்கப் படைகளை ஈரான் தாக்கத் தொடங்கியுள்ளது .  அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம்  மீது  ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாகதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  முப்படை தளபதிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். 

அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என  ஈரான் எச்சரித்தது போலவே தற்போது தாக்குதல் நடத்தி உள்ளது .  இந்நிலையில் அமெரிக்க எல்லையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் போர் நடத்த தயாராகி வருகிறது . உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்காவிற்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது  குறிப்பிடதக்கது .

click me!