அமெரிக்காவில் அதிர்ச்சி...!! 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லை திண்டாட்டம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 5, 2019, 7:52 AM IST

எதிர்வரும் காலங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை வேலைக்காக நம்பி இருக்கும்  பிற நாட்டினருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஏற்கனவே அங்கு வேலையில் உள்ள மற்றநாட்டினருக்கு சிக்கல் ஏற்படவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வேலையில்லை திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத நிலை தற்போது அமெரிக்காவில் உருவாகி உள்ளது.

Latest Videos

வரலாறுகாணாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசின் சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் 3.5 சதவீதமாக  வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. 50  ஆணடுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் என அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு முன்பாக 1969 ஆம் ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 3.5 சதவீதமாக இருந்தநிலையில் ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிலை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் புதிய வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வந்தாலும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றும்  மிகக் குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

 

கடந்த மாதத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ஆனாலும், ஆனாலும் அது போதுமானதாக இல்லை, அடிப்படை துறைகளான கல்வித் துறை,  நிதித்துறை, உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. எதிர்வரும் காலங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை வேலைக்காக நம்பி இருக்கும்  பிற நாட்டினருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஏற்கனவே அங்கு வேலையில் உள்ள மற்றநாட்டினருக்கு சிக்கல் ஏற்படவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!