தேர்தல் அன்று அமெரிக்காவில் தாக்குதல் - அல்கொய்தா திட்டம்?

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 11:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
தேர்தல் அன்று அமெரிக்காவில் தாக்குதல் - அல்கொய்தா திட்டம்?

சுருக்கம்

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8ம் தேதி நடக்கிறது. 

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்ட்டியிடும் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் உலக முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில்,தேர்தல் சமையத்தில் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாளில், அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பது குறித்து, நியூயார்க், டெக்சாஸ், விர்ஜினியா உள்ளிட்ட இடங்களில் உள்ள அதிகாரிகளையும், பயங்கரவாத  ஒழிப்பு கூட்டுப் படைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இதுகுறித்து எந்த கருத்தையும் எஃப்பிஐ கூறவில்லை. 

PREV
click me!

Recommended Stories

இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?
சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!