சீன வரலாற்றில் மிகப்பெரிய ராக்கெட்- வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை!

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 07:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
சீன வரலாற்றில் மிகப்பெரிய  ராக்கெட்- வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை!

சுருக்கம்

சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி, கடந்த அக்டோபர் 17-ம் தேதி ராக்கெட் செலுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிகமான பளுவை சுமந்து செல்லும் சக்திவாய்ந்த ராக்கெட்டை  சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நிரந்தர விண்வெளி மையம் போன்ற சீனாவின் எதிர்கால விண்கல ஆய்வுக்கு இந்த ராக்கெட் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிதாக உருவாக்கப்பட்ட Long March 5 என்ற இந்த ராக்கெட், Hainan மாகாணத்தின் Wenchang நகரில் உள்ள விண்கல ஏவுதள மையத்தில் இருந்து சீன நேரப்படி நேற்றிரவு 8.43 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 40 நிமிடங்களில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது. 

Long March 5 ராக்கெட், சீன வரலாற்றிலேயே மிகப்பெரிய ராக்கெட்-ஆக கருதப்படுகிறது. 25 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டில்  மண்ணெண்ணெய், திரவாக ஆக்ஸிஜன் ஆகிய 2 எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?
சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!