தமிழ்நாட்டில் ஊர் சுற்றுவோரே...அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் மரணம்...!! அப்புறம் உங்க இஷ்டம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 24, 2020, 1:03 PM IST

அறிவியல் மருத்துவம் என அனைத்திலும் வல்லரசு என பெயர் பெற்ற அமெரிக்காவே  கொரோனாவுக்கு  50 ஆயிரம் பேரை பலி கொடுத்துள்ள நிலையில் இன்னும் பல துறைகளில் தன்னிறைவு பெறாத இந்தியாவில்  இந்த வைரசின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்... 
 


உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில்  இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது இந்த தகவல்  அமெரிக்கர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது .  குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளை இது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றே சொல்லலாம் .   கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் இரண்டு மாதத்திற்கும் மேலாக சீனாவை மிகக் கொடூரமாக தாக்கியது ,  அங்கு இதுவரை நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டாலும் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . உலகில் அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் தன் கொடூர கரத்தை பரப்பி ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் கபளீகரம் செய்து வரும் கொரோனா,  இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. 

Latest Videos

இதுவரை ஸ்பெயினில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதில் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இத்தாலியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதில்  25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  பிரான்சில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதில் 21,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  ஜெர்மனியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்த வைரஸ் பிரிட்டனையும்  விட்டுவைக்கவில்லை பிரிட்டனில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதில்  அங்கு 18,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  துருக்கி ,  ஈரான் , ரஷ்யா பிரேசில் ,  கனடா ,  பெல்ஜியம் என கொரோனா பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் பட்டியல்கள் நீள்கிறது .  இந்நிலையில் உலக வல்லரசு என வலம் வந்த அமெரிக்கா கொரோனாவிடம்  சிக்கி சின்னாபின்னமாகும்  கொடுமையை வார்த்தைகளால் சொல்லி மாளாது , அந்த அளவிற்கு மிக மோசமாக அமெரிக்க மக்கள் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனாவை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை அமெரிக்கா கையில் எடுத்தும் அதில் எதிலும்  பலன் கிடைக்கவில்லை. 

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக கொடூரமாக உள்ளது ,  கடந்த 45 நாட்களில் அமெரிக்காவில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துள்ளது ,  அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து  709ஆக உயர்ந்துள்ளது ,  இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 50 ஆயிரத்து 243 பேர் உயிரிழந்துள்ளனர் ,  இன்னும் மருத்துவமனையில்  ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 544 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  இதுவரையில்  வெறும் 85 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் .  இன்னும் 14 ஆயிரத்து 997 பேர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் .  இன்னும் அமெரிக்காவில் நோய் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இதனால் உயிரிழப்புகள் தொடரும் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது .  வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 81 ஆயிரம் பேர் வரை காவு வாங்கப்படலாம்   என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது . 

இந்நிலையில் உலகிலேயே  அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான  இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது கடந்த ஒரு சில நாட்களிலேயே கொரோனா  பாதிப்பு  பன்மடங்காக உயர்ந்து நிலையில் , இதுவரை  இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்து 502 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை 722 பேர் உயிரிழந்துள்ளனர் .  அதிலும் தமிழகம் நாட்டிலேயே நோய் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது .  இதுவரை 1,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர் . இது மேலும் அதிகரிக்கக்கூடும் என  அஞ்சப்படுகிறது , இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  போடப்பட்டு இருந்தாலும் ,   அதையெல்லாம் மீறி இன்னும் பலர் வீதிகளில் உலா வருவதை காண முடிகிறது . கொரோனா குறித்து எந்த அச்சமும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக  பொது இடங்களில் சுற்றித்திருகின்றனர்.

இனிமேல்தான் இந்தியாவில் கொரோனா உண்மை முகத்தைக் காட்டப்போகிறது  என அனைத்து நாடுகளும் எச்சரித்து வரும் நிலையில் , இங்கு பலர் எந்த கட்டுப்பாடும் இன்றி தடைகளை மீறி வருகின்றனர் . அறிவியல் மருத்துவம் என அனைத்திலும் வல்லரசு என பெயர் பெற்ற அமெரிக்காவே  கொரோனாவுக்கு  50 ஆயிரம் பேரை பலி கொடுத்துள்ள நிலையில் இன்னும் பல துறைகளில் தன்னிறைவு பெறாத இந்தியாவில்  இந்த வைரசின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்... 

click me!