#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா..!! தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 3, 2020, 7:25 PM IST

அதில் ஹாங்காங்கின்  போராட்டக்காரர்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க அம்மசோதா பரிந்துரை செய்துள்ளது, 


அமெரிக்கா சீனா இடையே தென்சீனக்கடல், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் இருந்து வரும் நிலையில், ஹாங்காங் மீது சீன கொண்டுவந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு  சட்ட விவகாரத்தில், பொருளாதார தடை விதிக்கும்  சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்து வந்த நிலையில் 1997ஆம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஹாங்காங்கில் சுயாட்சி நடைபெற வேண்டும் எனவும், பாதுகாப்பு விவகாரத்தை மட்டும் சீனா கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும் சீனா-பிரிட்டிஷ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காலப்போக்கில்  ஹாங்காங் சீனாவின் ஒரு பிரதேசம் எனவும்,  ஹாங்காங்கில் முழு இறையாண்மையும் சீனாவுக்கு உள்ளது எனவும் அந்நாடு ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சந்தேகப்படும் நபர்களை கைது செய்து அவர்களை சீனாவுக்கு நாடு  கடத்துவதற்கான புதிய, சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டுவந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அது ஹாங்காங்கின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாகும் எனவும், இந்தச் சட்டம்  ஹாங்காங் மக்களை கொடுமை படுத்துவதற்கான சட்டம் எனவும் கூறிய அம்மக்கள்,  உடனே இதை திரும்பப் பெற வேண்டுமென போராட்டத்தில் குதித்தனர். ஆனாலும் போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி தன் ராட்சதவலிமையால்  அந்நாட்டின் மீது  தோசிய பாதுகாப்புச் சட்டத்தைத் சீனா திணித்துள்ளது.  சீனாவின் இந்நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மொத்தத்தில் ஹாங்காங் மக்களின் ஒட்டுமொத்த சுதந்தரமும்  முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, இந்தச் சட்டம் ஹாங்காங் மக்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான ஒடுக்குமுறை, இச்சட்டம் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது என அமெரிக்க நாடாளுமன்றம் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 1985 ஆம் ஆண்டு போடப்பட்ட சீன பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை மீறும் செயல் இது எனவும் அமெரிக்கா சீனாவை கண்டித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹாங்காங் விவகாரத்தில் பொருளாதார தடை விதிக்கும்  சட்ட மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு அது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. 

அதில் ஹாங்காங்கின்  போராட்டக்காரர்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க அம்மசோதா பரிந்துரை செய்துள்ளது, அதாவது ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கவும் அந்த மசோதா வகை செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு செனட் வியாழக்கிழமை இறுதி ஒப்புதல் அளித்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதிநிதிகள் சபை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த மசோதா வெள்ளை மாளிகைக்கு செல்லும் எனவும் பின்னர் அதிபர் ட்ரம்ப் கையோப்பமிட்ட உடன் அது சட்டம் ஆகவும் உள்ளது.  இந்நிலையில் ஹாங்காங் விவகாரத்தில் பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  சீனா-ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முடியாது, சீனாவின் உறுதி மற்றும் தேசிய இறையாண்மை மற்றும் ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றில்  மூன்றாவது நாடு குறுக்கிட முடியாது எனவும் கூறியுள்ள அவர், அமெரிக்கா முதலில் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும்,  ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

click me!