மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆவார், இவர் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்படுகிறார் . இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்நிலையில் இவர் பயங்கரவாத செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்தது நிதி திரட்டினார் என இவர் மீது பாகிஸ்தான் லாகூரில் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்நிலையில் நிதி நடவடிக்கை பணிக்குழு கொடுத்த அழுத்தம் காரணமாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் . இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் தொடங்கியது . விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது அதில் ஹபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஹபீஸ் சயீத்திற்கு சிறைதண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள , தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க பொறுப்பு துணைச் செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் , ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் குற்றங்களுக்கு அந்த அமைப்பை பொறுப்பேற்க வைப்பதுடன், பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கான ஒரு சர்வதேச கடமை என்பதை உணர்ந்து பாஸ்தான் நடந்து கொண்டுள்ளது பாராட்டுக்குறியது, பாகிஸ்தானின் இந்நடவடிக்கை தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு முக்கிய படிநிலை என பாராட்டியுள்ளார் .