சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வைத்த முதல் ஸ்டெப்..!! தெற்காசிய நாடுகளுக்கு நிதி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 28, 2020, 11:34 AM IST
Highlights

குறிப்பாக தெற்காசியாவின் இந்த நோயை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சிறப்பான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவும் ஒரு மில்லியன் நிதியை சுகாதார நிதியாக வழங்கியுள்ளது .  

கொரோனா வைரஸ் எதிர்கொள்ள சுமார் 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர்களை அமெரிக்கா உதவியாக வழங்கியுள்ளது .  இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது .  வைரஸ் வேகமாக பரவி வருவதுடன்,  இந்த வைரஸ் உலகம் முழுவதும் மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .   இந்நிலையில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அமெரிக்கா சுமார் 64 நாடுகளுக்கு உதவ முன்வந்துள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை கொரோனாவை  எதிர்கொள்ள போராடும் நாடுகளுக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா இந்த நிதியை அறிவித்துள்ளது. 

குறிப்பாக இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் ,  இது இந்தியாவில் ஆய்வகங்களை அமைப்பதற்கும் அடிப்படை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், கொரோனாவை  எதிர்கொள்ள தேவையான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்வதற்கும் உதவும் நோக்கில் இது வழங்கப்பட்டுள்ளது .  யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யு.எஸ்.ஏ.ஐ.டி) என்ற அமைப்பின் துணை நிர்வாகி போனி க்ளிக் ,  உலக  அளவிலான சுகாதாரத்தை காப்பதில் அமெரிக்கா தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்றார்,  பல ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு உதவிகளை செய்து வருகிறது .  அதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

நோய்களால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாத்துள்ளது உலக அளவில் பாதிக்கப்படும் நாடுகளுடன் இணைந்து சுகாதார நிறுவனங்களை உருவாக்கி உள்ளது ஏழை-எளிய நாடுகளின் சமூக மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது என அவர் கூறினார் .  குறிப்பாக தெற்காசியாவின் இந்த நோயை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சிறப்பான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவும் ஒரு மில்லியன் நிதியை சுகாதார நிதியாக வழங்கியுள்ளது .  இதில் இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர் நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர் பங்களாதேஷுக்கு 3.4 மில்லியன் டாலர் மொத்தம் ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து மில்லியன்  டாலரை அமெரிக்கா ஒருவனோ உதவி தொகையாக வழங்கியுள்ளது . 
 

click me!