கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். அதில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. தற்போது கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவை அடுத்து, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், ஆசிய, ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாரபட்சம் இல்லாமல் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658 ஆக உயர்ந்துள்ளது. 578 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், ஸ்பெயின் ,இந்தியா, இத்தாலி உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாரபட்சம் இல்லாமல் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் சிகிச்சைபெற்றுக் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். அதில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. தற்போது கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.
நானே என்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும் அரச நடவடிக்கைகளை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்துவேன். நான் அனைவரும் ஒன்றுசேர்ந்து கரோனாவை வென்று காட்டுவோம். #StayHomeSaveLives" என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பிரதமருக்கு கொரோனா தொற்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கின்றனர். இதுவரை பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658-ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 578 -ஆக உள்ளது.