இந்தியாவுக்கு ஆபத்து..!! பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வெளியில் வந்தனர்...!! எச்சரிக்கையாக இருக்க அமெரிக்கா அலர்ட்...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 2, 2019, 5:24 PM IST

இதுநாள் வரை ஆதரவு கொடுத்து தங்கள் நாட்டில் மறைத்து வைத்திருந்த தீவிரவாதிகளை  எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான்  முயற்சித்து வருகிறது என்றார். 


இந்தியா மீது தாக்கதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால் இந்தியா விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. சினாவும் அதற்கு உடந்தை என தகவல் வெளியாகி உள்ளது.

 

Latest Videos

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கையால் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு சீனா உறுதுணையாக இருப்பதாகவும் இந்தியா எச்சரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தான் சீனா உதவியுடன்  இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பாக் எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் தோல்வியில் முடிவதால், வேறு வழியின்றி தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்து இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்னில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவின் இந்தோ- பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை செயலாளர் ரெண்டல் ஷிரிவர் காஷ்மீரில் இந்தியா எடுத்த நடவடிக்கையால்,  இதுநாள் வரை ஆதரவு கொடுத்து தங்கள் நாட்டில் மறைத்து வைத்திருந்த தீவிரவாதிகளை  எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான்  முயற்சித்து வருகிறது என்றார்.  சீனாவும் அதை ஆதரிப்பதாக கூறிய அவர்,  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சீனா ஆதரவு அளித்து வருகிறது என்றார்.

இந்தியா பலமுறை சீனாவுடன் நட்பு பாராட்ட முயற்ச்சிகள் மேற்கொண்டும்  சீனா பாகிஸ்தானுடன் மட்டுமே நட்பு காட்டுகிறது என்றும், இந்தியாவுடன் எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் சீனா செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.  அமெரிக்க பயணத்தின் போது இந்திய வெளியுறவு துறை அமைச்சர், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்றும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அப்போது அமெரிக்கா அறிவுருத்தியதாகவும் அப்போது அவர் கூறுனார்.

click me!