பற்றி எரியும் உலகத்தின் நுரையீரல்... சுவாசிக்கவே சிரமப்படப்போகும் மனிதர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 23, 2019, 2:23 PM IST
Highlights

அமேசான் என்கிற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

அமேசான் என்கிற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தற்பொழுது நாம் சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் அமேசான் காட்டிலிருந்து கிடைக்கிறது. நாளை இந்த ஆக்சிஜன் நமக்குக் கிடைக்காமல் போகலாம். இந்த உலகத்தின் நுரையீரல் என்று சொல்லக்கூடிய அமேசான் காடு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இந்த காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் காட்டுத் தீயோ அல்லது வேறு ஏதேனும் இயற்கை சீற்றமோ அல்ல. பிரேசில் அரசாங்கம்.

கிட்டத்தட்ட 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இயற்கையின் வரப்பிரசாதமான, உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லக்கூடிய, பிரேசில் மட்டுமல்லாமல் இந்தியா இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாட்டு மக்களும் சுவாசிக்கக்கூடிய 20 சதவிகிதம் ஆக்சிஜனை தரக்கூடிய அமேசான் காட்டை பணத்திற்காகவும், வணிக முன்னேற்றத்திற்காகவும் அந்த நாட்டின் பிரதமரின் அனுமதியுடன் ஏரித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரேசிலில் இருக்கக்கூடிய நாட்டில் தீப்பிடித்து எரிந்தால் நமக்கு என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம். பிரச்சினை என்னவென்றால், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களும் பிறப்பதற்கு முன் இயற்கை நமக்கு நீர், நிலம், காற்று உள்ளிட்டவற்றை அளவில்லாமல் கொடுத்தது. அதில் நீர் தற்போது பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இவ்வளவு அளவு என்று ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இயற்கை வளமான காற்று இடம்பிடிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் சுவாசிக்கக் கூடிய ஆக்சிஜன் அளவு இவ்வுலகில் மிக குறைந்த அளவில் உள்ளது. இந்நிலையில் அமேசான் காடு எரிப்பு சம்பவம் மேலும் 20 சதவீதத்திற்கும் மேலான ஆக்சிஜனை இந்த உலகில் குறைத்துவிடும். இதனால் காலப்போக்கில் மனிதர்கள் சுவாசிக்க கூட முடியாத நிலை ஏற்படும்.

இந்த பிரச்சனையை ஆகஸ்ட் 2 ஆம் தேதி  நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாட்லைட் மூலம் அமேசான் காட்டுப் பகுதியை நோக்கும்பொழுது புகை மண்டலமாக தெரிந்திருக்கிறது. இதனை பார்த்த உடன் அதிர்ந்த நாசா விஞ்ஞானிகள் பிரேசிலின் நாட்டிற்கு தொடர்பு கொண்டு உங்கள் நாட்டில் மிகப் பெரிய தீ விபத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து அதை உடனடியாக நிறுத்துங்கள் அதற்குள் 3 மில்லியனுக்கும் மேல் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் மேல் தீயை அணைக்கவில்லை என்றால் ஆக்சிஜன் அளவு குறைந்து மனிதர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும் எனவே விரைந்து செயல்பட்டு அந்த தீயை அணையுங்கள் என்று தெரிவித்தது. இதற்கு பதிலளித்த பிரேசில் அரசாங்கம் இது எங்கள் நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை இதில் தலையிட வேண்டாம் என்று கூறியது. ஆனால் இது அவர்களது நாட்டுடைய தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. அமேசான் காடு உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் ஆக்ஸிஜன் தரக்கூடிய ஒரு பொதுவான காடு. 
 
பிரசிலின் 2018ல் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதில் அவர் வாக்குறுதி ஒன்றை அளித்தார். அது என்னவென்றால், இந்தியாவைப் போல பிரேசிலும் விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அந்நாட்டு மக்கள் விவசாயத்தையே தங்களது பொருளாதார மேம்பாடாக கருதி வருகின்றனர். இந்நிலையில் அதனை அதிகரிக்கும் விதமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில், அதிக அளவிலான விளைச்சல் நிலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சுயநலத்தில் விளைவுகளை  யோசிக்காமல் அமேசான் காட்டை கவலைப்படாமல் எரித்து சாம்பலாக்கி வருகின்றன. 

இந்த அமேசான் காடு எரிவதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்றால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான மர வகைகள் அழியக் கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே 40,000 மரவகைகள்  இருக்கக்கூடிய ஒரே காடு அமேசான் காடு மட்டும் தான். மேலும் 1,300 வகை இனப் பறவைகள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். 3000 மீன் வகைகள் அழிந்து போகும். 2.5 மில்லியன் பூச்சி வகை உயிரினங்கள் அழிந்து போகும் பணம் என்ற ஒரு விஷயத்திற்காக மனிதன் எத்தனை உயிர்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. 

click me!