ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா கொலை... அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்கா...!

By vinoth kumar  |  First Published Aug 1, 2019, 3:05 PM IST

அல்-கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


அல்-கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்து உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

Latest Videos

சில ஆண்டுகள் கழித்து ஒசாமாவின் 15-வது பிள்ளையான ஹம்சா பின்லேடன், அல்-கொய்தா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவை மிரட்டி, ஹம்சா பேசிய வீடியோ காட்சிகள் வெளியானது. அதில், தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடன் எச்சரித்திருந்தார்.

 

பின்னர் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராக ஹம்சா பின்லேடன் தேர்வு செய்யப்பட்டார். அதுமுதல் ஹம்சா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சா பின்லேடனின் தலைக்கு அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் விலையாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் என்.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஹம்சா எப்போது, எங்கே கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்க அரசும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை. 

click me!