பாகிஸ்தான் பிரதமர் ஆவதே லட்சியம் : மலாலா அதிரடி

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 12:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
பாகிஸ்தான் பிரதமர் ஆவதே லட்சியம் : மலாலா அதிரடி

சுருக்கம்

மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்கால முதலீட்டு அமைப்பு சார்பில் சிறப்பு ஐ.நா. கருத்தரங்கம் சார்ஜாவில் நடைபெற்றது. 

உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றங்களுக்கு போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.

பாலின சமநிலை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசிய மலாலா, இளம வயதில் பெண்கள் படித்து வேலைக்கு சென்று ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சம அந்தஸ்து பெற வேண்டும் என்றார். புத்தகம் படிப்பதால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும் சமூகத்தில் உள்ள அனைவரும், பெண்கள் சுதந்திரமாக செயல்பட ஆதரவு அளிக்க வேண்டும் என்று மலாலா பேசினார்.

அரபு நாடுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு துறைகளில் உயர் பதவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளாக பெண்கள் உள்ளதைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை, நான் முன்மாதிரியாக எடுத்துள்ளேன். அவரைப் போலவே பாகிஸ்தானின் பிரதமர் ஆவதே எனது லட்சயமாக உள்ளது என்றும் மலாலா பேசினார். நான் பாகிஸ்தா பிரதமர் ஆனால், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து உலக நாடுகளில் பாகிஸ்தானை ஒரு முன் மாதிரி நாடாக திகழச் செய்வேன்.

மருத்துவ துறையில் சேர்ந்து படிக்க வேண்டும என்பது எனது இன்னொரு லட்சியமாக இருந்தது, ஆனால் தற்போது அதை மாற்றிக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை தட்டி கேட்பதும் அதற்காக போராடுவதுமாக எனது 

லட்சியத்தை மாற்றிக் கொண்டதாக மலாலா பேசினார்.

PREV
click me!

Recommended Stories

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை..! பாகிஸ்தானில் அமெரிக்கா -விரிக்கும் வலை..!
Energy Lockdown: ஈரான் போரால் உலகத்துக்கு புது சிக்கல்? 'எனர்ஜி லாக்டவுன்'னா என்ன தெரியுமா?