ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் அதிகாரத்தை கைப்பற்றி தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். அவர்களின் ஆட்சியை பிடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து குரல்கள் எழ ஆரம்பித்து உள்ளன.
இந் நிலையில் தலைநகர் காபூல் அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் படுகாயம் அடைந்ததுள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதில் 3 பேர் பலியாக 21 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பலியானவர்களில் 3 பேர் பொதுமக்கள் என்றும் மற்றவர்கள் தாலிபான்கள் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக இப்போது குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.