தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கிய பிரபல நடிகர் சவ் யுன் பெட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கிய பிரபல நடிகர் சவ் யுன் பெட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் இவர்களால் துவங்கப்பட்டது தான் The Giving Pledge. இந்த அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொத்துக்களை தானமாக வழங்கி வருகின்றனர். இதுவரை இந்த அமைப்பில்,186 செல்வந்தர்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது தன்னை இணைத்துக்கொண்டவர் தான் பிரபல நடிகரான சல் யுன் பேட்.
இது குறித்து அவர் தெரிவிக்கும் பொது, "நாம் இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை.இதுவரை நான் பிறருக்காக வாழந்து இல்லை..என்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த ஆடையை அணிந்ததும் இல்லை. நம் உயிர் நம்மை விட்டு பிரிந்த பின் நம் உடமைகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.
எனவே தான், நான் இறந்தபிறகு என்னுடைய சொத்திலிருந்து ஐந்தாயிரம் கோடியை ஏழை எளிய மக்களுக்காக எடுத்துக்கொள்ளலாம் என இந்த அமைப்புடன் கையொப்பம் இட்டு உள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார். இவர் நடித்த படங்களில் Crouching Tiger, Hidden டிராகன் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உலக பணக்கார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையில் கூட இவருடைய பெயர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் அடுத்த ஆண்டு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என ஓடி ஓடி உழைக்கும் ஒரு சிலர், அவர்கள் சம்பாதிக்கும் அளவு கடந்த பணத்தையும் ஊழல் பணத்தையும் வெளிநாட்டு வங்கியில் கூடசேர்த்து வைத்து உள்ளனர். ஆனால் நடிகர் சவ் யுன்பெட்டேவின் இந்த தாராள செயல் அனைவரின் பாராட்டை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது